கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர், சுதாகர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், தனது மனுவை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் பேசுகையில், மக்கள் சேவையே தனது முதன்மை குறிக்கோள் என்றும், தொகுதியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இளைஞர் நலன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதனால், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment